டாடா திரைப்படத்தை பாராட்டி நடிகர் கார்த்தி பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக விளங்கி வருபவர் நடிகர் கார்த்தி. இவர் பொன்னியன் செல்வன் 1 மற்றும் சர்தார் உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ராஜ் முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் கார்த்தி சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் “டாடா” திரைப்படத்தை பாராட்டி வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், ஒரு வழியாக “டாடா திரைப்படத்தை பார்த்து விட்டேன். அருமையான படம்! நல்ல கதையை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். அதிலும் நடிகர் கவினுடைய நடிப்பு பார்க்க அழகாகவும், முழுமையாகவும் இருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். கணேஷ் பாபுவை நினைத்து பெருமை கொள்கிறேன்”. என்று குறிப்பிட்டு தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.