நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விருமன், பொன்னியன் செல்வன்1, சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் கார்த்தி தற்போது “ஜப்பான்” என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ராஜு முருகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க இருக்கிறார்.

அண்மையில் இப்படத்திற்கான பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் ஜப்பான் படத்தின் படப்பிடிப்பை இந்த மாதமே தொடங்கலாம் என்று படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், இப்படத்தின் இயக்குனர் ராஜு முருகனுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டதால் இப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் கார்த்தி அடுத்த படத்தை முடித்துவிட்டு ஜப்பான் படத்துக்கு தேதி ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது.