Actor Karthi Admitted in Hospital

மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் கார்த்தி அனுமதிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Actor Karthi Admitted in Hospital : தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கார்த்தி. நவரச நாயகன் என பெயரெடுத்த இவர் பல படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களிலும் கலகலப்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகர்.

இவர் கடந்த மாதம் 21ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்துங்கள் அதனை அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் அவரது உடல்நிலை மீண்டும் பாதிப்புக்குள்ளானது.

இதனால் அவரை மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உள்ளனர். அடுத்த மூன்று வாரங்களுக்கு கட்டாயம் ஓய்வில் இருந்தாக வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கார்த்தியின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதால் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.