Actor Kamal Haasan

Actor Kamal Haasan : “நடிகர் கமலஹாசனுக்கு மூளைக்கோளாறு” என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

கஜா புயலால் பாதித்த மாவட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன்.

இந்நிலையில், புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் மூன்றாவது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள களநிலவரங்களை ஆய்வு செய்து வருகிறார் மக்கள் நீதி மையம் தலைவர் நடிகர் கமல்ஹாசன்.

தேசிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு உதவும் நோக்கில், அமிதாபச்சன், ஆமிர்கான் போன்றோருடன் தொலைபேசியில் பேசியிருப்பதாகவும் நிருபர்களிடம் கமல் தெரிவித்தார்.

மேலும் கூறியதாவது,” அரசு சார்பில் செய்யும் உதவிகள் மக்களுக்கு போதவில்லை என்றும் , மேலும் நிவாரணங்கள் முழுவதுமாக மக்களை சென்றடையவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறிய கமல்ஹாசன், ‘நிவாரணத் தொகையில் மூன்று தவணைகளாக பிரித்து கொடுப்பது என்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் செயல் ‘ என்று கடுமையாக சாடினார்.

கமலின் இந்த கருத்தை குறித்து மதுரையில் பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ” தமிழக அரசு துருப்பிடித்த அரசு அல்ல, மக்களுக்கு சேவையாற்றும் கூர்மையான அரசுதான் தமிழக அரசு.

மக்களின் குறைகளை பூர்த்தி செய்யும் அரசை, குறை கூறும் கமலுக்கு மூளைக்கோளாறு.

மேலும் தமிழக அரசு கேட்ட நிவாரண உதவியை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கிறோம் ” இவ்வாறு கூறினார்.

அமைச்சர் செல்லூர் ராஜு வின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here