நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்டைலான உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் தீவிரமாக நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகிறது.

அனிருத் இசையமைப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்வானில் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதற்காக தென்னாபிரிக்கா சென்றிருக்கும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் கேமராவுடன் ஸ்டைலான உடையில் எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.