தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன் மரணமடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டையில் இருந்து சினிமா ஆர்வத்தில் சென்னை வந்தவர் ஜெயச்சந்திரன். இவருக்கு வயது 66. இவர் வடிவேலுவுடன் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், ஆறு படத்தில் இவர் நடித்த காமெடி காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரசித்து பெற்றது.

தமிழ் பட காமெடி நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

சென்னையில் தனது மனைவி லட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இன்று காலை தனது வீட்டில் உள்ள குளியலறையில் கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடி ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். இவரின் உடலுக்கு தமிழ் திரையுலகின் பலரும் அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்கம் சார்பில் விஷால் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.