நடிகர் ஜெய் தனது படத்தின் பிரஸ் மீட்டில் இயக்குனரிடம் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க சான்ஸ் கேட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெய். இவர் தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “தீரா காதல்” என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் இப்படம் வரும் மே 26 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெய் அப்போது இப்படத்தின் இயக்குனர் ரோகின் வெங்கடேசன் அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்க இருப்பதாக கேள்விப்பட்டேன் எனக் கூறி, அவரிடம் மேடையிலேயே அப்படத்தில் எனக்கு வில்லன் சான்ஸ் தருமாறு கேட்டுக்கொண்டார். அதன் வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.