ஐபிஎல் போட்டியை முதலமைச்சர் ஸ்டாலினுடன் கண்டுக்களித்துள்ள நடிகர் தனுஷின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து மாபெரும் முன்னணி நடிகராக அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது வாத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டை தொடர்ச்சியாக நேரில் சென்று கண்டு கழித்து வருகிறார். அதன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பெங்களூரைத் தொடர்ந்து நேற்றைய தினம் சேப்பாக்கத்தில் CSk vs SRH அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் விளையாட்டை காண நேரில் சென்ற தனுஷ் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் இணைந்து கண்டு களித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.