YouTube video

Actor Dhanush Surprise Statement For His Fans

Karnan Making Video Records : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் உருவாகியுள்ளன.

ஜகமே தந்திரம் திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார் Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் கர்ணன் திரைப்படத்தை பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ ஆகியவை தனுஷின் பிறந்தநாள் விருந்தாக வெளியானது.

தற்போது இந்த மேக்கிங் வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதுவரை 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. என்ன நாள் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.