யூத் ஐகானிக் விருதை பெற்ற நடிகர் தனுஷின் பெருமிதமான பேச்சு வைரலாகி வருகிறது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பு பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் நடிக்க இருக்கும் நடிகர் தனுஷிற்க்கு CII தக்ஷின் உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் சிறந்த நடிகருக்கான ‘Youth Icon’ விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

அப்போது மேடையில் பேசிய நடிகர் தனுஷ், நான் 40 வயதில் Youth Icon விருது பெறுவேன் என நினைத்துப் பார்க்கவில்லை. செல்லவும் சாதிக்கவும் இன்னும் நிறைய இருக்கிறது என்பதற்கான நினைவூட்டலாக இந்த விருது இருக்கிறது. எனக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. எனது கனவின் காரணமாக தான் நான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இன்னும் நிறைய கனவுகள் காண்கின்றேன். இந்த நேரத்தில் என்னுடைய பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.