Actor dhanush salary for one movie
Actor dhanush salary for one movie

ஒரு படத்தில் நடிக்க தனுஷ் வழங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியான படம் தான் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது படம் என அனைவரும் அறிந்தது.

இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி வருகிறது என்றே சொல்லலாம். தமிழகத்தில் மட்டுமே சுமார் 60 கோடியை தாண்டி வசூலை ஈட்டி உள்ளது.

இது மட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பில் இன்னும் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது. மேலும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கப் போகிறார்.

இந்நிலையில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க கிட்டத்தட்ட 50 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் நிலையத்தில் வைரலாகி வருகிறது