
நடிகர் தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தின் “ரெண்டு ராஜா” பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “நானே வருவேன்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். கலைப்புலி எஸ் தானு அவர்கள் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்திருக்கும் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா, தனுஷ் ஆகியோரின் கூட்டணி இம்முறையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி இருவரும் இணைந்து பாடி இடம்பெற்றிருக்கும் “ரெண்டு ராஜா” என்ற பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த பாடலின் ஆடியோ ரசிகர்களிடம் நல்ல ஹிட் கொடுத்திருந்த நிலையில் தற்போது இந்த பாடலின் வீடியோ வெளியாகி உள்ளதால் உற்சாகத்துடன் இப்பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.