dhanush
படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் தனுஷ் ரசிகர்களை சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது.

Actor Dhanush meeting fans in london – அசுரன் பட வேலைகளை முடித்த நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் சமீபத்தில் லண்டன் புறப்பட்டு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

அசுரன் ட்ரைலர் ரிலீஸ் தேதி இதோ – தனுஷ் ரசிகர்களுக்கு செம அப்டேட்

இந்நிலையில், தனுஷ் லண்டன் வந்திருப்பதை தெரிந்து கொண்ட லண்டன் வாழ் தமிழர்கள் அவரின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கே வந்துவிட்டனர்.

ஒருவர் இருவர் அல்ல, சுமார் 200 பேருக்கும் மேல் அங்கு திரண்டு விட்டனர். அதில் ஏராளமானோர் குழந்தைகளாகவும், சிறுவர்களாகவும் இருந்தனர்.

இதையறிந்த தனுஷ் அவர்களிடம் சென்று கை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அவர்களும் மகிழ்ச்சியுடன் தனுஷுடன் கைக்குலுக்கு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.