நடிகர் தனுஷ் தனியாக தெருவில் ஜாக்கிங் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோக்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

மாபெரும் நட்சத்திரபட்டாலங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. அவ்வப்போது படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தனுஷின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி சமீபத்தில் மும்பை சென்று இருந்த நடிகர் தனுஷ் மீண்டும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் இணைந்த பிறகு இன்று காலையில் தெருவில் தனியாக ஜாக்கிங் சென்றுள்ளார். அவரை ஆச்சரியத்துடன் ரசிகர்கள் சிலர் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.