Deena About Vijay
எப்ப பார்த்தாலும் விஜய் விஜய்னு கேட்குறீங்க என தொடர் பேட்டிகளால் கடுப்பாகியுள்ளார் தீனா.

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் தீனா, விருமாண்டி படத்தில் வில்லனாக அறிமுகமான இவர் அதன் பின்னர் அஜித், விஜய் என பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

சமீபத்தில் தீனா பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார், அத்தனை சேனல்களும் அவரிடம் அஜித், விஜயை பற்றி கேள்வியையே முன் வைத்துள்ளன.

இதனால் பேட்டி ஒன்றில் கொஞ்சம் கடுப்பாகியுள்ளார் தீனா, மற்றவர்களை புகழ்ந்து பேச எதற்கு என்னை பேட்டி எடுக்கிறீர்கள் என கோபப்பட்டுள்ளார்.

மேலும் நான் ஏற்கனவே பல பேட்டிகளில் விஜய் அண்ணாவை பற்றி பேசி விட்டேன், மீண்டும் மீண்டும் அவரை பற்றி பேசுங்கள் என்றால் என்னதான் பேசுவது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.