daniel balaji
பிகில் படத்தில் சைடு வில்லனாக நடித்துள்ள நடிகர் டேனியல் பாலாஜி தெரிவித்துள்ள கருத்து விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Daniel balaji twit sun tv cut his his talk – அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது.

இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். பிகில் இசை வெளியீட்டு விழாவில் அவரும் கலந்து கொண்டு மேடையில் பேசினார்.

கவினால் லாஸ்லியாவிற்கு நேர்ந்த கொடுமை – வெளியான ஷாக்கிங் அப்டேட் .!

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘விஜய் அண்ணாவைப் பற்றி நான் பேசியதிலிருந்து, சன் டிவி ஒரு பகுதியை வெட்டியுள்ளது’ என டிவிட் செய்துள்ளார். இதைக்கண்ட விஜய் ரசிகர்கள் ‘நீங்கள் என்ன பேசினீர்களோ அதை வீடியோவாக போடுங்கள்’ எனக் கூறி வருகின்றனர். அதற்கு கண்டிப்பாக செய்கிறேன் என அவரும் பதிலளித்துள்ளார். எனவே, விரைவில் அதுபற்றி அவர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியை நேரில் பார்த்த ரசிகர்கள் சன் தொலைக்காட்சி பல முக்கிய பகுதிகளை வெட்டி விட்டது என வேதனையுடன் கூறி வருகின்றனர். பிகில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி வருகிற 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.