மரணத்துடன் போராடி வருகிறேன் ஆனாலும் ஒருவரும் உதவ முன் வரவில்லை என கண்கலங்கியுள்ளார் நடிகர் போண்டாமணி.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிகர் வடிவேலு உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் போண்டாமணி. 50 வயதுக்கு மேல் ஆகும் இவர் ஏற்கனவே உடல் நலக் குறைபாட்டால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இரண்டு கிட்னியும் செயல் இழந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.

மரணத்துடன் போராடி வருகிறேன்.. ஆனாலும் ஒருத்தரும் உதவ முன் வரவில்லை - கண் கலங்கும் போண்டாமணி

இதனால் சக காமெடி நடிகரான பெஞ்சமின் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு போண்டாமணி அவர்களின் உடல் நலம் குறித்து பேசி உதவி கேட்டு கண்ணீர் விட்டார். இந்த நிலையில் தற்போது போண்டா மணி உயிருக்கு போராடி வருகிறேன். நடிகர் சங்கம் உட்பட அனைத்து சங்கங்களிலும் உறுப்பினராக இருக்கிறேன் ஆனாலும் இதுவரை யாரும் உதவ முன் வரவில்லை என வருத்தத்தோடு பேசி உள்ளார்.

மரணத்துடன் போராடி வருகிறேன்.. ஆனாலும் ஒருத்தரும் உதவ முன் வரவில்லை - கண் கலங்கும் போண்டாமணி

படம் ஒன்றில் சாக்கடையில் இறங்கி நடித்த போது அந்த நச்சு தண்ணீர் உள்ளே சென்றதால் ஏற்பட்ட பிரச்சினை தான் இன்று இந்த அளவிற்கு வந்திருக்கிறது எனவும் பேசியுள்ளார்.