உடல் நலக்குறைவால் பிஜிலி ரமேஷ் காலமானார்.
தமிழ் சினிமாவில் “நட்பே துணை” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிஜிலி ரமேஷ். இதனைத் தொடர்ந்து ஜாம்பி, A1, ஆடை, பொன்மகள் வந்தாள், கோமாளி ,எல்கேஜி இது போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிஜிலி ரமேஷ் தற்போது காலமானார். இந்த தகவலை கேட்டு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.