Actor Bavun Raj Passes Away

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் மரணம் அடைந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Actor Bavun Raj Passes Away : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் படங்களில் இரண்டாம் அலை பெரும் பாதிப்பையும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் திரையுலகைச் சார்ந்த நடிகர்கள் பலர் தொடர்ச்சியாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே மற்ற காரணங்களினாலும் திரையுலக பிரபலங்கள் மரணம் அடைந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு நடிகரையாவது நாம் இழந்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் உள்ளிட்ட சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் நடித்த பவுன்ராஜ் என்று நடிகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.