Actor Bala Singh Passed Away
பிரபல தமிழ் நடிகர் பாலா சிங் உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் பாலாசிங்.

மலையாள படத்தில் திரையுலகில் அறிமுகமானாலும் தமிழ் படங்களில் மூலமாக தான் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார்.

இவர் சமீபத்தில் வெளியாகி இருந்த NGK, மகா முனி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்தியன், ராசி, புதுப்பேட்டை போன்ற வெற்றி படங்களிலும் நடித்திருந்தார்.

67 வயதான இவர் சமீபத்தில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை பெற்று வந்தார். ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்களும் ரசிககர்களும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.