Actor Azeem About BB Entry

என்னக்கா பயமா ஹா ஹா ஹா என பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதை முடிவு செய்துள்ளார் நடிகர் ஒருவர்.

Actor Azeem About BB Entry : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் ரேகா வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி என மூவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நான்காவது வெளியேற்றம் இந்த வாரம் நடைபெற உள்ளது.

50-ஆவது நாளில் பிக் பாஸ் வீட்டில் விஜய் டிவி பிரபலமான அசின் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் அவரின் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து சூசகமாக சில பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு என் நண்பனா இருக்க தகுதி தேவையில்லை. ஆனால் எதிரியா இருக்க தகுதி வேண்டும். வளர்த்துக் கொள். எனக்கா பயமா ஹா ஹா ஹா என பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் பிக்பாஸ் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் ஹாஸ்டேக்குகளில் விஜய் டெலிவிஷன், பிக் பாஸ் போன்ற டேக்குகளை பயன்படுத்தியுள்ளார். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க போவதைத் தான் இப்படி சூசகமாக தெரிவிக்கிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இதோ அந்த பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.