நடிகர் கார்த்தியின் படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கதில் உருவாகி வரும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜப்பான் திரைப்படத்தின் சிறப்பு introduction வீடியோவை படக்குழு வெளியிட்டு இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்திருந்தது.

இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இப்படத்தை தொடர்ந்து கார்த்தியின் 27வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கார்த்தி தனது 27வது திரைப்படத்தை 96 திரைப்படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அப்படத்தை நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் வில்லனாக நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.