YouTube video

Actor And Director Parthiban Interview About Thala Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். படங்களில் நடிப்பதோடு சரி, அவர் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை.

இருப்பினும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இவருக்கு இருந்து வருகிறது.திரையுலக பிரபலங்கள் பலரும் அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையை கொண்டுள்ளனர். தற்போது நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட நடிகர் பார்த்திபன் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.

அதாவது அந்தப் பேட்டியில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பீர்களா என்று கேட்டதற்கு நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார். மேலும் என்னை விட அஜித்திற்கு சிறந்த வில்லன் அஜித் தான் என அவரது ஸ்டைலில் கூறியுள்ளார்.

பார்த்திபனின் இந்த பேட்டி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் தற்போது வெளிவந்த திரைப்படம் உருவாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் தற்போது இப்படத்திற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.