Anandraj Brother Death
நடிகர் ஆனந்த ராஜின் தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actor Anandraj Brother Death : தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் ஆனந்த ராஜ். இவர் தற்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் 55 வயதான இவரின் தம்பிகனகசபை புதுசேரி கோவிந்தசாலை திருமுடி நகரில் ஏலசீட்டு நடத்தி வந்துள்ளார்.

இதில் நஷ்டம் ஏற்பட்டதால் படுக்கையறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் மரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அப்பகுதி போலீசார் கனகசபையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.