நடிகர் ரஜினிகாந்த்திற்கு நெருங்கிய நண்பர் அமிதாபச்சன் அளித்துள்ள twitter பதிவு வைரல்.

தென்னிந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க பல முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

எனது அன்பும் நன்றியுணர்வும் எப்போதும் உங்களுடன் இருக்கும்!!!.. ரஜினி குறித்து ட்விட் செய்த அமிதாப் பச்சன்!.

இந்நிலையில் பாலிவுட் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் அமிதாப்பச்சனின் என்பதாவது பிறந்தநாளுக்கு நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் தான் தனக்கு எப்போதும் முன்னோடி எனக் குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து நெகிழ்ந்து போன நடிகர் அமிதாப் பச்சன் பதில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

எனது அன்பும் நன்றியுணர்வும் எப்போதும் உங்களுடன் இருக்கும்!!!.. ரஜினி குறித்து ட்விட் செய்த அமிதாப் பச்சன்!.

அதில் அவர், “ரஜினி சார், நீங்கள் எனக்கு அதிக அங்கீகாரத்தை தருகிறீர்கள் உங்கள் புகழுக்கு முன் நான் என்னை ஒப்பிட்டு பார்க்க கூட முடியாது, நீங்கள் சக நடிகர் மட்டுமல்ல நெருங்கிய நண்பர். என்னுடைய அன்பும், நன்றி உணர்வும் உங்களுடன் இருக்கும்” என்று பதில் அளித்திருக்கிறார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.