
Actor Ambareesh : ரஜினி நண்பரும் பிரபல முன்னணி கன்னட நடிகருமான அம்பரீஸ் அவர்கள் மரணமடைந்துள்ளார்.
66 வயதாகும் இவர் உடல்நல குறைபாடு காரணமாக பெங்களூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் பிரியா என்ற படத்தில் ஸ்ரீ தேவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சித்தராமையா தலைமையிலான ஆட்சியின் போது கர்நாடாகாவின் கேபினெட் அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மரணம் ஒட்டு மொத்த திரையுலகிலும் பேரதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெருங்கிய நண்பர் என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரு சென்று இறுதி அஞ்சலி செலுத்துவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sad to hear about the demise of Rebel Star #Ambareesh. Huge loss to Indian cinema.
Condolences to @sumalathaA and the family…This one dialogue of ಕನ್ವರ್ “ಕುತ್ತೆ ಕನ್ವರ್ ನಹಿ ಕನ್ವರ್ ಲಾಲ್ ಬೋಲೋ”…..will be etched in our hearts forever. Rest in peace! pic.twitter.com/8k5KduR0iu
— Omprakash (@imOmi16) November 25, 2018
A wonderful human being … my best friend … I have lost you today and will miss you … Rest In Peace #Ambrish
— Rajinikanth (@rajinikanth) November 24, 2018