ராஜசேகர்பாச்சி செய்த சாதனைக்கு நடிகர் அஜித் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Actor Ajith personaly wished Rajasekarpaci great achievement photo viral:

கோலிவுட் திரையுலகில் முக்கியமான டாப் ஹீரோக்களில் ஒருவராக இடம்பிடித்து இருப்பவர் நடிகர் அஜித்குமார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் துணிவு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படமாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படம் தொடர்பான அறிவிப்புகள் கடந்த மே மாதம் வெளியானதை தொடர்ந்து படப்பிடிப்பு தொடர்பான தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்த கோவளம் அருகே உள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர்பாச்சி என்பவரை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ளார். அதன் புகைப்படம் தற்போது ரசிகர்களால் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.