ajith
நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Ajith mass getup for thala 60 movie – நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின் வினோத் இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் ஒரு காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் தனது கெட்டப்பை மாற்றி வருகிறார்.

சமீபத்தில் க்ளீன் சேவ், ட்ரிம் தாடி, கண்ணாடி, கோட் என அவர் புதிய கெட்டப்பில் ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

என்னமா மாறிட்டாரு தல அஜித்தா இது ? இன்ப அதிர்ச்சியில் தல ரசிகர்கள் .

இந்நிலையில், தற்போது முறுக்கு மீசையுடன் அவர் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தல 60 படத்தில் காவல் அதிகாரி என்பதால், கம்பீர தோற்றத்திற்காக முறுக்கு மீசையை அவர் வைத்துள்ளார் எனக்கருதப்படுகிறது. எனவே, இப்படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாகவும், அடுத்த வருட கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.