சுற்றுப்பயணத்தை முடித்து மீண்டும் சென்னை திரும்பிய தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வளம் வரும் தல அஜித் குமார் துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் அஜித் சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு தனது சுற்றுப்பயணத்தை மீண்டும் வெளிநாடுகளில் மேற்கொண்டு இருந்தார்.

அதன் புகைப்படங்களும் இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னை திரும்பிய நடிகர் அஜித் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.