அம்மா உணவகத்தில் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் துள்ளுவதோ இளமை அபிநய்.

Actor Abhinay in Life History : தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் துள்ளுவதோ இளமை. இந்த படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அபிநய். இந்த படத்தில் தனுஷின் நடிப்பை விட அபிநய் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. தமிழ் சினிமாவில் நிச்சயம் பெரிய அளவில் ஒரு ரவுண்டு வருவார் என கூறப்பட்டது.

ஆனால் அவருடைய துர்திருஷ்டம் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 18 படங்கள் அவரது கையை விட்டுச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். அடுத்த வேளை சாப்பாட்டை திட்டமும் இல்லாமல் அம்மா உணவகத்தில் சாப்பிடும் நிலைமைக்கு ஆளானார்.

அம்மா உணவகத்தில் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்ட துள்ளுவதோ இளமை அபிநய் - தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா??

தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள் என மாற்றப்பட்டுள்ளார்‌. இவரது இரண்டாம் படத்திற்கான சம்பளம் இன்னும் 60 ஆயிரம் பாக்கி உள்ளது எனவே இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அம்மாவிற்கு புற்றுநோய் ஏற்பட்டு சேர்த்து வைத்த பணம் சிகிச்சைக்காக செலவாகி அம்மாவும் தற்போது அவருடன் உயிரோடு இல்லை.

தன்னுடைய அப்பாதான் அப்பாவுக்கு அப்பாவாக, அம்மாவுக்கு அம்மாவாக தன்னுடன் இருந்து வருவதாக கூறியுள்ளார். ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் உள்ள இவர் பல வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்களையும் இழப்புகளையும் பற்றி இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Abhinay கஷ்ட காலமும் மாறும்.. உங்களை Fresh & Positive-அ மாத்தப்போற Change Over Interview