Active Corona Cases Details in Chennai
Active Corona Cases Details in Chennai

சென்னையில் 84% கொரானா நோயாளிகள் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Active Corona Cases Details in Chennai : இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்திலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

கொரானாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே சென்றாலும் மற்றொரு பக்கம் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வருபவர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் தான் கொரானா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதுவரை 95,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 80,761 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சென்னையில் வெறும் 13,064 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

கரோனாவின் கோரப்பிடியில் இருந்து சென்னையை காப்பாற்ற கமல்ஹாசன் சொல்லும் புதிய வழி – வீடியோ இதோ!

அதாவது அதாவது இதுவரை 84% பேர் கொரானாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். இது சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது.

மேலும் சென்னையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளும் மருத்துவர்களின் அயராத உழைப்பே காரணம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.