அஜித்தை பாராட்டி பேசி உள்ளார் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
மகிழ்த்திருமேனி இயக்கத்தில் ,லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைதுள்ளர். மேலும் த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா, அர்ஜுன் தாஸ், ப்ரியா பவானி சங்கர் ,சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பேட்டியில் அர்ஜுன் கதாபாத்திரம் குறித்து கேட்டபோது படம் பார்த்தால் என்னுடைய கேரக்டர் குறித்து தெரியவரும் என்று கூறியுள்ளார். பிறகு அஜித்தின் கேரக்டர் மங்காத்தா போல மாஸ் காட்டுமா என்ற கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார். அது என்னவென்றால் “அஜித் எப்போதுமே கிங்கு தானே”என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பதில் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.