
லியோ படப்பிடிப்பில் இன்று நடிகர் அர்ஜுன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் விஜயுடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற இருக்கும் லியோ படப்பிடிப்பில் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் இணைய இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தில் பிரபலம் முன்னணி நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் அவருக்கான படப்பிடிப்பை இன்று படமாக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக நடிகர் அர்ஜுக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டிருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.