Ac / Air Cooler :
Ac / Air Cooler :

Ac / Air Cooler :

குழந்தைகளை ஏ. சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

☆ ஏ. சி. காற்று குழந்தைகளின் முகத்தில் நேரடியாகப் படுவதுபோல, படுக்க வைக்காதீர்கள். குழந்தைகள் மூச்சுவிடக் கஷ்டப்படுவார்கள்.

☆ இரவில் காற்று அனலாக இருப்பதால், ஏ. சி. அறைக்குள் நுழைந்ததுமே சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் தூங்க அனுமதிக்காதீர்கள்.

கொஞ்சம் வளர்ந்த பிள்ளையாக இருந்தால், மார்புப் பகுதியையும், மூன்று வயதுக்குள்ளான குழந்தை என்றால், மார்புப் பகுதியோடு பாதத்தையும் துணியால் மறைத்துத் தூங்க வையுங்கள்.

☆ ஏ. சி. யில் இருக்கும் பில்டரில் சேரும் தூசியை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால், அதில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூசிகள், குழந்தைகளின் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

☆ குழந்தைகளுக்கு உடல் டெம்பரேச்சர் மாறுவது பற்றிச் சொல்லத் தெரியாது. எனவே, சூடான டெம்பரச்சரிலிருந்து சட்டென ஏசி அறைக்குள் அழைத்துச் செல்லாதீர்கள். அல்லது, அறைக்குள் நுழைந்ததுமே 16, 17 எனக் குறைந்த டெம்பரேச்சரில் ஏ. சி. யை வைக்காதீர்கள்.

☆ ஏ. சி. யின் மெக்கானிசம்படி வெளிக்காற்று உள்ளே வந்தாலும், வெளிக்காற்று உள்ளே வருகிறபடி, ஒரு சின்ன ஓப்பனிங் வைத்து கொள்ளுங்கள்.

அப்போதுதான் குழந்தைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். இல்லையென்றால், நீங்கள் வெளிவிட்ட காற்றையே குழந்தையும் சுவாசிக்க நேரிடும்.

☆ அடிக்கடி ஏசியிலேயே இருக்கும் குழந்தையை வெளிநிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும்போது, அங்கு நிலவக்கூடிய வெப்பநிலையை குழந்தையால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தலைவலி, மயக்கம், அதிக வியர்வை வருதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு குழந்தையின் உடல்நிலை பாதிப்படையவும் வாய்ப்பிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here