பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக் ராஜா தன்னுடைய முதல் பதிவை பதிவு செய்துள்ளார்.

Abishek Raja in First Tweet After BB Eviction : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிக மிகப் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து ஐந்தாவது சீசன் 3 வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று பலரது விமர்சனங்களை சம்பாதித்து குறைவான ஓட்டுக்களை பெற்று கடந்த வாரம் வெளியேறியவர் தான் அபிஷேக் ராஜா. சினிமா விமர்சகரும் நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர் பிக் பாஸ் வீட்டில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருந்தார். இவருடைய செயல்பாடுகள் மக்களுக்கு அதிருப்தி அளிக்கவே கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆற்றல் தரும் ஐந்து சிவ மந்திரங்கள்.!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக் ராஜா பதிவு செய்த முதல் பதிவு - அப்படி என்ன சொல்கிறார் பாருங்கள்

மூன்று வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்த அபிஷேக் ராஜாவிற்கு ஏற்பட்ட 6 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக பதிவு செய்துள்ளார்.

T.Nagar திரும்பிப் பார்க்க வைத்த Velavan Stores – சண்டி மேளத்துடன் தொடங்கிய Diwali Festival | HD

இந்த பதிவில் பிக் பாஸ் வீட்டில் நான் நானாக இருந்தேன். என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை வைத்து நிகழ்ச்சியில் விளையாடினேன். பிக்பாஸ் என்பது ஒரு கேம், அதற்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் நான் விளையாடினேன். நான் நானாக இருந்தேன் என்ற மன நிறைவோடு தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என பதிவு செய்துள்ளார்.

அபிஷேக் ராஜாவின் இந்த ட்விட்டர் பதிவு பிக்பாஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.