மூன்று வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்த அபிஷேக் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

Abishek Raja in 3 Week Salary Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் அபிஷேக் ராஜா. முதல் வாரம் முடிவதற்கு முன்பாகவே வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக இந்த நிகழ்ச்சியிலிருந்து திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து முதல் வார எலிமினேஷனில் நாவ்யா வெளியேற்றப்பட்டார்.

தமிழகத்தில் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை, ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை

அதன் பிறகு கடந்த வார எலிமினேஷனில் அபிஷேக் ராஜா வெளியேறினார். ஆரம்பம் முதலே பக்காவாக ஸ்கெட்ச் போட்டியில் பிரியங்காவுடன் இருந்தால் தொடர்ந்து மக்களிடத்தில் ரீச் ஆகுவோம் என்ன திட்டம் போட்டு அவருடனே இருந்தார். மேலும் ப்ரோமோவில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டில் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்தார். ஆனால் இவரது துரதிருஷ்டம் இவர் ஸ்டேட்டர்ஜி அனைத்தும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

Superstar Rajinikanth-ன் உண்மையை உடைத்த Soundarya Rajinikanth.! | Hoote App Launch | Latest Video HD

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் ஒரு வாரத்திற்கு 1.75 லட்சம் சம்பளம் என மொத்தம் மூன்று வாரத்திற்கு ரூபாய் 5.25 லட்சம் சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.