பிக் பாஸ் சீசன் 5 லிருந்து இரண்டாவது ஆளாக எலிமினேட்டான நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

Abishek Raja Evicted From Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று நிகழ்ச்சியின் இருபத்தி ஒன்றாவது நாள் ஒளிபரப்பாக உள்ளது. சனிக்கிழமை ஆனால் நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் பேசினார்.

முருகப்பெருமானின் ஏழாம்படை வீடு.!

ஞாயிற்றுக் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது எலிமினேஷன் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது யார் என்பது தெரியவந்துள்ளது. ‌‌

18 போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பவர் அபிஷேக் ராஜா. இவர் மீது மக்களிடையே அதிக அளவில் அதில் இருந்து வருகிறது. முதல் வாரமே இவரை வெளியேற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் ஓட்டளித்தனர். ஆனால் கடைசியில் யாரும் எதிர்பாராத விதமாக நடியா சாங் வெளியேற்றப்பட்டார்.

முதலில் எல்லாரையும் மதியுங்கள்! – Director R.V.Udayakumar Speech

இந்தநிலையில் இரண்டாவது எலிமினேஷனில் மக்கள் திட்டமிட்டபடி அபிஷேக் ராஜா மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.