100 நாளை வைத்து கொண்டு சிஎம் ஆகி விடலாம் என கனவு காண்கிறீர்கள் என உலக நாயகன் கமல்ஹாசனை விளாசியுள்ளார் போட்டியாளர் அபிஷேக்.

Abishek Blast BB and KamalHaasan : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கி இரண்டாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் அபிஷேக். சினிமா விமர்சகர்கள் மற்றும் தொகுப்பாளரான இவர் இதற்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பிக்பாஸ் நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல்ஹாசனையும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

16-ந்தேதி சபரிமலை நடை திறப்பு : தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

100 நாளை வைத்து கிட்டு CM ஆகி விடலாம்.. கமலை விளாசிய அபிஷேக் - திடீரென வைரலான சர்ச்சை வீடியோ.!!

அந்த அளவிற்கு விமர்சனம் செய்த அபிஷேக் இன்று போட்டியாளர்களில் ஒருவர் ஆக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள நிலையில் அவர் பேசிய வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Kavin கிட்ட ஒரு Selfie கூட எடுக்க முடியல..அவ்ளோ SCENE இல்ல – Special Interview With Amritha Aiyer.!

100 நாளை வெச்சுக்கிட்டு தமிழ்நாட்டோட சிஎம் ஆகி விடலாம் என நீங்க போடுற கணக்கு இருக்கே.. உங்கள சுத்தி கேமராவை வைத்துக்கொண்டு படம் பிடிக்கிறார்கள் உலகத்துக்கே தெரியும். கேட்டா பிக் பாஸ்னு சொல்லுவானுங்க என பேசியுள்ளார் அபிஷேக். இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் ஷேர் செய்த ரசிகர்கள் என்ன ஆண்டவரே இதெல்லாம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் இந்த வார இறுதியில் இதுகுறித்து அபிஷேக்கிடம் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அரசியல் பேசி வருவதை பற்றியே அபிஷேக் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.