பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த நடிகை அபிராமி அடுத்து தான் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தாலும், நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அபிராமி.

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அபிராமி நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், ‘கஜன்’ என்கிற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை குறும்பட இயக்குனர் மதன் இயக்கியுள்ளார். இப்படத்தை மலேசியாவை சேர்ந்த விமலா குமார் மற்றும் தினேஷ் குமார் என இருவரும் தயாரிப்பதோடு இப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளனர்.

இப்படம் பற்றிய அறிவிப்பை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.