பாவணி விவகாரத்தால் அபிநய் மனைவி அவரை விவாகரத்து செய்து விட்டதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Abinay Clarification About Divorce Issue : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் அபிநய். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமீபத்தில் வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவர் பாவனையை காதலிப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் இவருடைய மனைவி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெயருக்குப் பின்னால் இருந்த அபிநய் பெயரை நீக்கினார். இதனால் அவர் அபிநயை விவாகரத்து செய்யப்போவதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் அதெல்லாம் உண்மை இல்லை பொய் என அபிநய் மனைவி மற்றும் மகளோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். உள்ளே என்ன நடந்தது என்பதை எடுத்துக் கூறியதும் தன்னுடைய மனைவி புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லாமல் எங்களை வாழ்க்கை சுமூகமாக செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.