Abdul Kalam biopic Poster Revealed : former President of India, For the Indian freedom fighter | Dr. Abdul Kalam | india | Tamil nad

Abdul Kalam biopic Poster Revealed : 

அப்துல் கலாமின் வாழ்க்கை கதையும் படமாகிறதாம். இதில் யார் ஹீரோ என்ற தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளனர். எனினும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ஹாலிவுட்ல இருந்து பாலிவுட்டுக்கு வந்த பயோ – ஃபிக்‌ஷன் படங்களோட தாக்கம் கொஞ்சம் கொஞ்சமா இப்போ தமிழ்லயும் உருவாக தொடங்கியிருக்கு.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, தன்னோட வாழ்க்கை கதையவே சினிமாவுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தி இயக்கி நடிச்சிருந்த படம் மீசைய முறுக்கு.

இந்த படத்தை தமிழ்ல நவீன கால பயோ ஃபிக்‌ஷன் படங்களுக்கான ஒரு தொடக்கம்னே சொல்லலாம்.

கடந்த ஆண்டு வெளியான நடிகையர் திலகம் உலகம் முழுக்க வசூல் வேட்டையை நடத்தியது. சாவித்ரியோட வாழ்க்கை கதைய கொஞ்சம் கற்பனை கலந்து கமர்ஷியல் படங்களுக்கான அம்சங்களோட இந்த படம் பதிவு பண்ணியிருக்கு.

அயோக்யனாக ஜெயித்தாரா விஷால்? – அயோக்யா விமர்சனம்.!

நடிகையர் திலகம் படத்துக்கு கிடைச்ச வரவேற்ப தொடர்ந்து இப்ப தமிழ், தெலுங்குல பயோ ஃபிக்‌ஷன் படங்களுக்கான சீசன் தொடங்கி இருக்கு.

அந்த வகையில நடிகர்கள் எம்.ஜி.ஆர், என்.டி.ஆரோட வாழ்க்கை கதையும் விளையாட்டு வீரர் மாரியப்பனோட வாழ்க்கை கதையும் கூடிய விரைவில திரைப்படமா வெளிவரவிருக்கு. இதுபோக அப்துல் கலாமின் வாழ்க்கை கதையும் படமாகிறதாம்.

இதில் யார் ஹீரோ என்ற தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளனர். எனினும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.