முதல் முறையாக தனது காதலனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஆயிஷா. ‌

Bigg Boss Aayisha With Boyfriend : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தியா சீரியல் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா.

இந்த சீரியலை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் மீண்டும் காதலில் விழுந்து இருப்பதால் புகைப்படம் ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.

இருந்த போதிலும் தற்போது வரை தன்னுடைய காதலனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் காதலர் தினமான நேற்று இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆயிஷா வெளியிட்ட அவரது காதலனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.