Aayirathil Oruvan 2
ஆயிரத்தில் ஒருவன் 2 படம் உருவாகினால் அதன் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவலை செல்வராகவன் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Aayirathil Oruvan 2 Music : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள NGK திரைப்படம் வரும் மே 31-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது.

என்.ஜி.கே பாட்டுக்கு அடிமையான பிரபல இசையமைப்பாளர் – அவரே சொன்ன தகவல் இதோ!

இந்த படத்திம் ப்ரோமோஷனுக்காக செல்வராகவன் பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்றில் ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகினால் அதற்கு இசையமைப்பாளர் யார் என கேட்டுள்ளனர்.

அதற்கு செல்வராகவன் நிட்சயமாக ஜி.வி பிரகாஷ் தான். முதல் பாகத்தின் இசை அவருடைய படைப்பு, உழைப்பு அதனால் இரண்டாம் பாகத்திற்கும் அவர் மட்டும் தான் இசையமைப்பாளர் என கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை – மாஸ் காட்டும் சூர்யா ரசிகர்கள்!

மேலும் விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் உருவாகும் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.