Aasai Movie Unrevealed Secret
Aasai Movie Unrevealed Secret

வேட்டி விளம்பரத்தால் அஜித்துக்கு வெற்றி பட வாய்ப்பு கிடைத்த ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Aasai Movie Unrevealed Secret : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ஆசை.

இன்றுவரை ரசிகர்களால் சலிப்பில்லாமல் ரசிக்கப்பட்டு வரும் இந்தப்படத்தில் அஜித் காதல் மன்னனாக கலக்கியிருப்பார். காதல் காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை புல்லரிக்கச் செய்யும்.

தல சொல்லியும் கேட்காததால் வந்த விபரீதம்.. சிக்கிய வீடியோவால் அஜித் ரசிகர்கள் மீது பாயும் நடவடிக்கை..?

ஆனால் முதன் முதலில் இந்த படத்தில் அரவிந்த்சாமி தான் நடிக்க வேண்டிய இருந்துள்ளது. அவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் நடிக்க முடியாமல் போக இயக்குனர் அரவிந்த் சாமியை போலவே அழகான ஒருவர் வேண்டும் என காத்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போதுதான் வேட்டி விளம்பரம் ஒன்றில் அஜித்தை பார்த்துள்ளார். அதன் பின்னர் இவரை சந்தித்து கதை கூற படம் சூப்பர் ஹிட்டாகி விட்டது.