Aari Plan to Meet Fans

டைட்டில் வின்னர் ஆரி ரசிகர்களை சந்திக்க போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Aari Plan to Meet Fans : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் முடிந்து டைட்டில் வின்னர் ஆக ஆரியும் ரன்னர் ஆக பாலாஜி முருகதாசும் இடம்பெற்றிருந்தனர்.

டைட்டில் வின்னர் ஆக ஆன ஆரி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் டுவிட்டரில் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோவை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அவருக்கு டிக்கெட் 2 பினாலே தொடங்கியதிலிருந்து உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சரியானவுடன் வெகுவிரைவில் வந்து ரசிகர்களை சந்திக்கப் போவதாகவும் அந்த பதிவில் கூறியுள்ளார்.

“Waiting To meet you all very soon “என்ற பதிவு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.