Aari in Article15 Tamil Remake

பிரபல நடிகரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் ஆரி.

Aari in Article15 Tamil Remake : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன். நடிப்பது மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்று டைட்டிலை வென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஆரிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கைந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது பிரபல நடிகரான உதயநிதி நடித்து வரும் ஆர்டிகல் 15 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆரி.

இதுகுறித்த தகவல் இணையத்தில் வெளியாக ஆரி ஆர்மியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.