பிக் பாஸ் டைட்டில் வென்ற கையோடு நடிகர் ஆரி பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Aari in 1st Post After BB : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட ஆரி டைட்டிலை பெற்றார்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த சீசன் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டது. இவர் கிட்டத்தட்ட 16 லட்சம் ஓட்டுகளை பெற்றிருந்தார் எனவும் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
பிக் பாஸ் டைட்டில் வென்ற ஆரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லாப் புகழும் வாக்களித்த உங்களுக்கே என கூறி கையில் ட்ராபியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்