Aari Advice to People in Bharathi Kannamma Serial

பாரதி கண்ணம்மா சீரியலில் பிக் பாஸ் ஆரி பங்கேற்று மக்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.

Aari Advice to People in Bharathi Kannamma Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கடந்த இரண்டு வாரங்களாக பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியலின் மெகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய ஆரி வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று. தோல்வி தான் வெற்றிக்கு ஆரம்பம், வெற்றியை தலையில் ஏற்றிக் கொள்ள கூடாது.

மேலும் கூட்டு குடும்பம் தான் சிறப்பான ஒன்று. கூட்டு குடும்பத்தில் நிறைய பெண்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து பொறுமையை கற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.