பிக் பாஸ் சீசன் 5 தன்னுடைய மனம் கவர்ந்த போட்டியாளர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஆரி.

Aari About Favourite Contestant in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கோலி, ஆபத்தானவராக மாறுவார் : காம்பீர் கருத்து

பிக் பாஸ் சீசன் 5-ல் மனம் கவர்ந்த போட்டியாளர் யார்?? ஓப்பனாக பதிலளித்த ஆரி

72 நாட்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் விரைவில் விரைவில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் தற்போது சீசன் 4 டைட்டில் வின்னரான ஆரியிடம் இந்த சீசனில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் என்று கேட்கப்பட்டது.

இனிமேல் அல்லு அர்ஜூன் தமிழில் கலக்குவாரு – Music Director Devi Sri Prasad Speech | Pushpa Press Meet

அதற்கு பதிலளித்துள்ள 5 வது சீசனில் உள்ள போட்டியாளர்கள் அனைவருமே தனித்துவத்துடன் விளையாடுகின்றனர். இதனால் அவர்களின் திறமையும் மெருகேறி உள்ளது. இதனால் இவர்தான் மனம் கவர்ந்த போட்டியாளர் என யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நடிகர் ஆரி கூறியது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.