ஒருவரை திருத்திக்கொள்ள விமர்சனம் செய்யுங்கள் அவரை அழிக்க விமர்சனம் செய்யாதீர்கள் என பீஸ்ட் பட விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார் ஆரி.

Aari About Beast Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிலர் படத்தை தரம் தாழ்ந்த முறையில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் பீஸ்ட் பல விமர்சனங்களுக்கு பிக்பாஸ் ஆரி பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார். அதாவது ஒருவரை திருத்திக்கொள்ள விமர்சனங்கள் ஒருவரை அழிக்க விமர்சனம் செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் 2 படங்களும் திரையரங்குகளில் நல்லபடியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தைப் பார்க்க வருபவர்கள் எல்லோரும் காசு கொடுத்து தான் படத்தை பார்க்கிறார்கள். அதனால் படத்தை தாழ்த்தி பேசுவது என்பது சரியானது அல்ல. படம் வெற்றியா தோல்வியா என்பதை வசூலை வைத்து படக்குழு முடிவு செய்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.